வணக்கம்
தமிழ் நாட்டில் 156 தொகுதிகளில் ‘வெற்றி-தோல்வி’ யை நிர்ணயிக்கும் ஒரே சாதி, நாடார்கள் மட்டுமே.
தமிழகத்தில் நாடார்களின் வாக்காளர் சதவிகிதம்
11%கேரளாவில் 57 தொகுதிகளில் ‘வெற்றி-தோல்வி’ யை நாடார்கள் நிர்ணயிக்கிறார்கள்.
கேரளாவில் நாடார்களின் வாக்காளர் சதவிகிதம்
8%விகிதாச்சார அடிப்படையில் குறைந்தபட்சம் 60 முதல் 70 நாடார் MLA க்கள் தமிழ் நாட்டிலும், 30 முதல் 40 நாடார் MLA க்கள் கேரளாவிலும், இருக்கவேண்டும்.
ஆனால் இருப்பதோ, தமிழ் நாட்டில் 15 MLA க்கள், கேரளாவில் 2 MLA க்கள் மட்டுமே.
நாடார்களே விழித்தெழுங்கள், நமது உரிமையை வென்றெடுப்போம் வாருங்கள்.
சான்றோர் உலக இணையவாசலுக்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
விரைவில் தமிழகத்திலும் கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இரண்டு மாநிலங்களிலும் நாடார்களின் வாக்காளர் எண்ணிக்கை மலைக்கவைக்கிறது.
சமீபத்தில் நாங்கள் திரட்டிய தகவல்கள் பிரமிப்பையும், திகைப்பையும் உண்டாக்குகின்றன,
மேலும் ஆத்திரமூட்டுகின்றன.
வந்தேறிகளின் ஆட்சியில் வீழ்த்தப்பட்ட நாடார்கள், தங்களின் சொந்த பலத்தையும்,
இந்த தேசத்தை ஆண்ட வரலாற்றையும் மறந்துவிட்டார்கள்.
கேரள–தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட நாடார்கள்,
ஏன் அரசியலில் மிகப் பெரிய அரசியல் தோல்வியில் உள்ளோம்?
இந்த அரசியல் தோல்வியை நாடார்கள் உடைத்தெறிந்து மாபெரும்
அரசியல் வெற்றி பெற வேண்டிய நேரம் இது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரசர்களாக இந்த நாட்டை ஆண்ட நாம், இனி அடிமைகளாக வாழக்கூடாது. விழித்தெழுங்கள் நாடார்களே.
கேரளா
இம்மாநிலத்தில் நாடார் வாக்காளர்கள் 8%.
மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கேரளாவில்:
- 57 தொகுதிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் முக்கியப் பலம் கொண்ட சாதியாக நாடார்கள் இருக்கிறார்கள்.
- 14 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக உள்ளனர்.
குறைந்தபட்சம் 30 முதல் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் நாடார்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், இப்போது உள்ளவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே.
விரிவான விபரங்களுக்கு, இங்கே சொடுக்கவும் கேரள தேர்தல் – 2026.
தமிழகம்
தமிழகத்திலும் நாடார்கள் எல்லாக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டு அரசியல் பலம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தமிழகத்தில்:
- 156 தொகுதிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் முக்கியப் பலம் கொண்ட தமிழ்நாட்டின் ஒரே சாதியாக நாடார்கள் இருக்கிறார்கள்.
- 22 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக உள்ளனர்.
குறைந்தபட்சம் 60 முதல் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் நாடார்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், இப்போது உள்ளவர்கள் வெறும் 15 பேர் மட்டுமே.
விரிவான விபரங்களுக்கு, இங்கே சொடுக்கவும் தமிழக தேர்தல் – 2026.
வரலாறு சொல்வதென்ன!
சேர சோழ பாண்டிய மன்னர்களாக தென்னிந்தியாவை ஆண்ட அரச வம்சம் நாடார்கள்.
என்று 16.11.2012 அன்று, அன்றைய முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்
இருப்பினும், இரண்டு மாநிலங்களிலும்:
- நாடாண்ட அரசகுல நாடார் மக்கள் தொடர்ந்து அரசியல் பின்னடைவையே சந்திக்கின்றனர்.
- அரசியல் கட்சிகளும் பொய், புரட்டு, ஏமாற்று மூலம் நாடார்களுக்கு உரிய அரசியல் அந்தஸ்தை தர மறுக்கின்றன.
- அரசியல் கட்சிகள் பொய் சொல்லி நாடார்களை ஏமாற்றுகின்றன.
- அரசியல் கட்சிகளின் கபட நாடகங்கள் நாடார்களின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கின்றன.
- வந்தேறிகளின் அரசியல் சூழ்ச்சிகள், பொய் பிரச்சாரங்களும் நாடார்களுக்கு எதிராகவே இருக்கின்றன.
தீர்மானம்
- வரலாறு நமக்கு ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அளித்துள்ளது.
- மாபெரும் வாக்காளர் எண்ணிக்கை நமக்கு மிகுந்த பலத்தை தருகிறது.
- நமக்குரிய அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது நமது தலையாய கடமையாகும்.
- நாடார்கள் ஒன்றுபட்டு நிற்கும்போது, எந்த அரசியல் சக்தியும் நம்மை புறக்கணிக்க முடியாது.
- நாம் அமைதியாக இருந்தால், நமது எதிர்காலத்தை மற்றவர்கள் தீர்மானிப்பார்கள்.
- நாம் நமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் காலம் வந்து விட்டது.
- வாருங்கள் நாடார்களே, வெற்றி நமதே.
செயல்படுத்த வேண்டியவை
- இன்று முதல் நமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க செயலில் இறங்குவோம்.
- யாரும் நமக்கு நமது உரிமைகளை தரப்போவதில்லை, நாமே நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
- சான்றோர் வழியில் ஜனநாயக வழியில் கட்சிகளிடம் நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை கோருவோம்.
- அவர்கள் தர மறுக்கும் பட்சத்தில் எல்லா வழிகளிலும் நமது போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்.
- போராட்ட குணம் நாடார்களின் ரத்தத்தில் கலந்துள்ளது.
- நாடார் போராடினால் நாடு தாங்காது.
நன்றி.
